--- --:--:-- --

காங்கிரஸ் மேடையில் என் தாயை அவமதித்துவிட்டார்கள் – பிரதமர் நரேந்திர மோடி

3

பிகார் பாஜகவினருடன் காணொளி வாயிலாக பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “என் தாயார் அரசியலில் எதுவும் செய்யவில்லை. ஆனால் பிகாரில் ஆர்.ஜே.டி. – காங்கிரஸ் மேடையில் அவமதிப்புக்கு உள்ளானார். அவர்கள் என் அம்மாவை மட்டும் இழிவுபடுத்தவில்லை. நாட்டில் உள்ள தாய்மார்களை, சகோதரிகளை இழிவுபடுத்தி உள்ளனர்” என பேசியுள்ளார்.

 

பிகார் மாநிலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ‘வாக்காளர் அதிகார பயணத்தை’ மேற்கொண்டார். இந்தப் பயணம் நேற்றோடு (செப்டம்பர் 1ஆம் தேதி) முடிவடைந்தது. இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக பிகார் மாநிலத்தின் தர்பங்காவில் பேரணி மேற்கொண்டார்.

 

அப்போது எதிர்க்கட்சித் தலைவர்கள் ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ் ஆகியோர் வருவதற்கு முன்பாக அங்கு அமைக்கப்பட்டிருந்த ஒரு மேடையின் மீது ஏறிய சிலர் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது தாய் ஆகியோர் குறித்து இழிவுபடுத்துவம் வகையில் பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

 

இந்நிலையில், ஜப்பான் மற்றும் சீன பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று இந்தியாவுக்கு திரும்பிய பிரதமர் நரேந்திர மோடி, பிகார் பாஜக கூட்டத்தில் காணொளி வாயிலாக பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர், “என் தாயார் அரசியலில் எதுவும் செய்யவில்லை. ஆனால் பிகாரில் ஆர்.ஜே.டி. – காங்கிரஸ் மேடையில் அவமதிப்புக்கு உள்ளானார்.

 

அவர்கள் என் அம்மாவை மட்டும் இழிவுபடுத்தவில்லை. நாட்டில் உள்ள தாய்மார்களை, சகோதரிகளை இழிவுபடுத்தி உள்ளனர்” என பேசியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி பேசியதைக் கேட்ட பாஜகவினர் கண்ணீர் சிந்தினர்.

Right Menu Icon