பாஜகவில் வாரிசு அரசியல் இல்லை: நயினார் விளக்கம்
நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜிக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டதால், பாஜகவில் வாரிசு அரசியல் என திமுகவினர் விமர்சித்து வந்தனர்.
ஆனால், தான் பாஜகவுக்கு வருவதற்கு முன்பே கட்சியின் மாநில இளைஞரணி தலைவராக பாலாஜி இருந்தார் என்றும், பாஜகவில் வாரிசு அரசியல் இல்லை என்றும் நயினார் விளக்கம் அளித்துள்ளார். 1989-ல் அதிமுகவில் இணைந்த அவர், ஜெ., மறைவுக்கு பிறகு 2017-ல் BJP-ல் இணைந்தார்.






