--- --:--:-- --

அப்பாவை தேடி சென்ற இளைஞர்.. ஆறடி பள்ளத்தில் மூச்சு திணறி பலியான இளைஞர்..!

10

சென்னை பள்ளிக்கரணையில் கடந்த திங்கள்கிழமை தந்தையை தேடிச் சென்ற இளைஞர் மாயமான நிலையில் அவரது அழுகிய சடலம் மழையில் தேங்கிய பள்ளத்திலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

 

பள்ளிக்கரணை காயுதே மில்லத் நகரில் மழைநீர் சூழ்ந்ததால் வேறு பகுதிக்கு மக்கள் வெளியேறி வருகின்றனர். திங்கள்கிழமை தனது வீட்டை பார்க்க மீண்டும் காயிதே மில்லத் நகருக்கு முருகன் என்ற நபர் சென்றுள்ளார்.

 

முருகன் நீண்ட நேரம் ஆகியும் வராததால் முருகனைத் தேடிக் கொண்டு சென்ற 29 வயதான நபர் திடீரென மாயமானார். இந்நிலையில் அவரை சடலமாக மீட்டுள்ளனர்.

 

மாயமான நபரை மூன்று நாட்களாக தேடி வந்த பெற்றோர் காவல் துறையில் புகார் அளித்தனர். பள்ளம் இருப்பது தெரியாமல் நடந்து சென்று விழுந்திருக்கலாம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

 

Right Menu Icon