--- --:--:-- --

கை தவறிய செல்போன்.. பிடிக்க முயன்று கல்குவாரியில் விழுந்த இளைஞர்..!

10

தாம்பரம் அருகே எருமயூரில் கரும்பாறை மீது அமர்ந்து பேசிக் கொண்டிருந்தவர் தவறி விழுந்த செல்போனை பிடிக்க முயன்று இளைஞர் சுமார் 70 அடி ஆழமுள்ள தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.

 

அதே பகுதியில் தங்கி இருந்து சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள திருவண்ணாமலையை சேர்ந்த ஜெயராமன் தனது செல்போனை பிடிக்க முயன்று தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.

 

நீர்மூழ்கி கருவிகளுடன் நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு ஜெயராமன் உடல் மீட்கப்பட்டது. சுமார் 40 அடி உயரத்தில் இருந்தே அவருக்கு தண்ணீரிலேயே அடிபட்டு மயக்கம் அடைந்து மூழ்கி இருக்கலாம் என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.

 

Right Menu Icon