அசாமில் நேரு ஏற்படுத்திய காயங்கள் இன்னும் ஆறவில்லை : பிரதமர் மோடி
அசாமில், நேரு ஏற்படுத்திய காயங்கள் இன்னும் ஆறவில்லை என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். மணிப்பூர் மற்றும் மிசோரம் பயணங்களை தொடர்ந்து, அசாம் சென்ற பிரதமர் மோடி, பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் தர்ராங்கில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், அசாமை பல தசாப்தங்களாக ஆண்ட காங்கிரஸ், பிரம்புத்திரா ஆற்றின் குறுக்கே 3 பாலங்கள் மட்டுமே கட்டியதாக கூறினார்.
ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் பாஜக 6 பாலங்களை கட்டி இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார். தான் சிவப்பெருமானின் பக்தர் என்று கூறிய பிரதமர் மோடி, அவதூறுகளின் விஷத்தை அருந்தியே அகற்றி விடுவேன் என்றார்.காங்கிரஸ் ஆட்சியின் போது, அவர்கள் பாகிஸ்தான் ராணுவத்திற்கு ஆதரவாக செயல்பட்டதாக பிரதமர் குற்றம்சாட்டினார்.
1962-ஆம் ஆண்டு சீனாவுடனாக போரை குறிப்பிட்டு பேசிய மோடி, அப்போதைய பிரதமர் நேருவால் அசாம் மக்களுக்கு ஏற்பட்ட காயம் இன்னும் ஆறவில்லை என கூறினார். மேலும், வரும் நவராத்திரி அன்று குறைக்கப்படவுள்ள ஜிஎஸ்டியால், ஏராளமான மக்கள் பயன் அடைவார்கள் என்று பிரதமர் கூறினார்.






