--- --:--:-- --

காதல் திருமணம் செய்த ஜோடியை தாக்கிய பெண் வீட்டார்..!

13

சேலம் மாவட்டம் ஓமலூரில் காதல் திருமணம் செய்த ஜோடியை தாக்கி புதுமணப் பெண்ணை கடத்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஓமலூரை சேர்ந்த ஜுவா திவாகர் காதலித்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திருமணம் செய்துள்ளனர்.

 

தீபாவின் குடும்பத்தினர் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த மிரட்டல் விடுத்து வந்ததாக கூறி புதுமண தம்பதிகள் ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

 

பெண் வீட்டாரை அழைத்து பேசிய காவலர்கள் புதுமண தம்பதிகளுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இருக்கக் கூடாது என்று எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பிவைத்தனர்.

 

இதனை எதிர்த்து காவல் நிலையத்திலிருந்து காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது காரை வழிமறித்த ஒரு கும்பல் தம்பதியை தாக்கியதோடு ஜீவாவின் தந்தை மீதும் தாக்குதல் நடத்திவிட்டு தீபாவை கடத்தி சென்றது. இதுகுறித்து மீண்டும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து காவலர்கள் விசாரணையை முடுக்கி விட்டனர்.

Leave a Reply

Right Menu Icon