ரயில்களில் இனி திரி நேத்ரா கருவி! ஒரு புதிய முயற்சி!
ரயில்வே தண்டவாளங்களில் இருக்கும் தடைகளை கண்டறிய திரி நேத்ரா புதிய கருவி எழுநூற்றுக்கும் மேற்பட்ட ரயில் இன்ஜின் களில் பொருத்தப்பட்டு இருப்பதாக ரயில்வே ஊழியர் மனோகரன் தெரிவித்துள்ளார்.
அக்கருவி சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை உள்ள இடர்பாடுகளை அகச்சிவப்பு கதிர்கள் மூலம் படம் பிடித்து காட்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் பாதையில் இடர்பாடுகள் இருந்தால் தாமாகவே என்ஜினை நிறுத்தும் வகையிலான கருவிகள் சென்னை அரக்கோணம் ரயில்களில் பொருத்தப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் தண்டவாளத்தில் மர்ம நபர்களால் வைக்கப்பட்ட காந்தம் ரயிலை தடுமாற செய்தது குறிப்பிடத்தக்கது.





