--- --:--:-- --

பின்னோக்கி சென்ற ரயில்..!

4

திருத்தணி ரயில் நிலையம் அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் கப்ளிங் துண்டிக்கப்பட்டதால் 5 பெட்டுகள் கழன்று பின்னோக்கி சென்றது. சென்னை துறைமுகம் ரயில் நிலையத்திலிருந்து 20 பெட்டிகள் நிலக்கரி நிரப்பிய சரக்கு ரயிலில் அரக்கோணம் மார்க்கத்தில் மும்பைக்கு சென்று கொண்டிருந்தது.

 

மாலை 7 மணி அளவில் திருத்தணி ரயில் நிலையம் அருகே சிக்னலுக்காக நின்று விட்டு புறப்பட்ட பொழுது 5 பெட்டிகள் கழன்று தனியாக சென்றுள்ளது. பின்னர் அந்த பெட்டிகளை மீண்டும் எடுத்து கொண்டு ரயில் புறப்பட்டது. இதனால் அதன் பயணம் 2 மணி நேரம் தாமதமானது.

 

Right Menu Icon