ஓடிக்கொண்டிருந்த லாரியிலிருந்து கழன்று பறந்த டயர்..!
சென்னை ஆவடி அருகே ஓடிக்கொண்டிருந்த லாரியிலிருந்து டயர் கழன்று பறந்து சென்றது. இந்த விபத்தில் சாலையில் சென்றவர்கள் நல்வாய்ப்பாக உயர்த்தப்பினர்.
ஸ்ரீபெரும்புதூரிலிருந்து குஜராத் சென்ற லாரியிலிருந்து டயர் கழன்ற சம்பவம் பாலமேடு சுங்கச்சாவடி முன் நிகழ்ந்தது. லாரியின் இடது பக்க டயர் கழன்று நெடுஞ்சாலையில் இருந்து சர்வீஸ் சாலைக்கு பறந்தது. சாலை ஓரத்தில் நடந்து சென்ற மூவரை உரசியபடி சென்றது.
அது வேகமாக வந்த டயரிலிருந்து மூவர் நூலிழையில் உயிர்தப்பினர். ரயில் மேடை அருகே எடுத்து வைக்கப்பட்டுள்ள இருசக்கர வாகனம் மீது மோதிய விபத்தில் அந்த டயர் கீழே விழுந்தது. அதில் இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன.






