--- --:--:-- --

7ம் வகுப்பு மாணவனை மூங்கில் பிரம்பால் அடித்த ஆசிரியை..!

4

கோவையில் ஏழாம் வகுப்பு மாணவனை தாக்கிய ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கோவை மாவட்டம் ஆலந்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 30 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

 

இந்த பள்ளியில் ஏழாம் வகுப்பு மாணவன் வகுப்பில் பாடத்தை கவனிக்காமல் சக மாணவனுடன் பேசி சிரித்து விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதில் மாணவனின் வலது கை முட்டியில் காயம் ஏற்பட்டது. இது குறித்து மாணவனின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் அதிகாரி பாலமுரளி பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார்.

 

அப்பொழுது ஆசிரியை மாணவனை பிரம்பால் அடித்தது தெரிய வந்துள்ளது. அதனையடுத்து ஆசிரியை பணியிடை நீக்கம் செய்து கோவை மாவட்ட கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

 

Right Menu Icon