விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்த விண்கலம்..!
ககன்யான் மாதிரி விண்கல சோதனையை வெற்றிகரமாக நடத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
பிரதமர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் இஸ்ரோவில் உள்ள அனைத்து விஞ்ஞானிகளுக்கும் தமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக உத்தரவிட்டுள்ளார்.
விஞ்ஞானிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தியில் இஸ்ரோவின் சாதனை இந்திய விண்வெளி பயணத்தில் குறிப்பிடத்தக்க மைல் கல் என்று கூறியுள்ளார். ககன்யான் திட்ட குழுவின் அர்ப்பணிப்புடன் கூடிய கடின உழைப்புக்கு பாராட்டுக்கள் தெரிவித்துக் கொள்வதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





