--- --:--:-- --

ஆசிரியரின் இருசக்கர வாகனத்தில் புகுந்த பாம்பு..!

3

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே அரசுப்பள்ளி ஆசிரியரின் இருசக்கர வாகனத்தில் படமெடுத்தாடும் நாகப்பாம்பு பாதுகாப்பாக மீட்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்த துரையரசன் வஞ்சிபாளையம் அரசு உயர்நிலை பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

 

நேற்று பள்ளிக்கு செல்வதற்காக வழக்கம்போல தனது இருசக்கர வண்டியில் பயணித்த துரையரசன் பள்ளி அருகே வண்டியை நிறுத்தி கவனித்துள்ளார். வண்டி பஞ்சர் ஆகி இருக்கலாம் என்று ஆராய்ந்த போது நல்ல பாம்பு ஒன்று படமெடுத்து ஆடுவது தெரியவந்துள்ளது. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகியுள்ளது.

 

Right Menu Icon