சாப்பாட்டுத் தட்டில் உயிருடன் மீனைப் பரிமாறிய உணவகம்..!
நாள்தோறும் இணையத்தில் வினோதமான மற்றும் மனதை கவரும் வீடியோக்கள் உலா வருகிறது. அது போன்று மற்றொரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜப்பானில் உள்ள ஒரு உணவகத்தில் வாடிக்கையாளர்களுக்கு காய்கறிகள், நூடுல்ஸ் உடன் வழங்கப்பட்டதில் மீன்கள் உயிருடன் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பானில் நபர் ஒருவர் அங்கு உள்ள உணவகம் சென்று சாப்பிடுவதற்கு சென்றுள்ளார். உணவும் வந்துள்ளது. அந்த நபர் மீனை உண்ண முற்பட்ட போதுதான் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மீனை உண்ண தன் கையிலிருந்த குச்சிகளை வைத்து எடுக்க முற்பட்டார்.
அப்பொழுது அந்த மீன் வாயை பிளந்து பூச்சிகளைப் பிடித்து இழுத்தது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்க்கும் இணையவாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.






