--- --:--:-- --

கழுத்தில் நிஜ பாம்பு! கையில் சூலாயுதம்!

1

காஞ்சிபுரம் அருகே வாடகைக்கு நாக பாம்புகளை வைத்து அருள் வாக்குகளை கூறிவந்த பெண் சாமியாரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வெள்ளரி அம்மன் கோவில் பகுதியை சேர்ந்த பட்டதாரி பெண் கபிலா.

 

இவர் கடந்த 2000 ஆண்டு முதல் பத்ரகாளி அம்மன் கோவிலை கட்டி அருள்வாக்கு சொல்லி வந்துள்ளார். கோயிலில் பக்தர்களின் கூட்டத்தை அதிகரிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் சர்ப்ப சாந்தி பூஜை என்ற பெயரில் நாக பாம்புகளை வாடகைக்கு பெற்று பூஜை செய்துள்ளார்.

 

கழுத்தில் பாம்புடன், சூலத்தை கையிலேந்தி நிஜத்தில் அம்மனை போல தோன்றிய பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறும் காட்சியை சமூக வலைதளங்களில் பெண்சாமியார் கபிலா பதிவேற்றம் செய்துள்ளார். தகவலறிந்த காஞ்சிபுரம் மாவட்ட வனத்துறையினர் பெண் சாமியார் கபிலாவிடம் நாக பூஜை குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

 

விளம்பரத்திற்காக நாகபாம்பை வைத்து பூஜை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் சாமியார் கபிலாவை கைது செய்து வனத்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Right Menu Icon