இளைஞரை கத்தியால் குத்திய ரவுடி..!
காஞ்சிபுரம் மாவட்டம் மரக்கடை அருகே இளைஞர் ஒருவரை ரவுடி கத்தியால் குத்திய விவகாரத்தில் ரவுடியை கைது செய்ய கோரி இளைஞரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். உரகடம் அடுத்த வாரணவாசி கிராமத்தை சேர்ந்தவர் ஆகாஷ்.
இவர் பைக்கில் சென்ற பொழுது ரௌடி ஆன தினேஷ் என்பவர் மீது பைக் மோதியதாகவும் இதனால் ஏற்பட்ட தகராறில் இளைஞரை தினேஷ் கத்தியால் குத்தியதாகவும் கூறப்படுகிறது.
இளைஞருக்கு படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும் நிலையில் ரௌடி தினேஷை கைது செய்ய கோரி கடலூர் வாலாஜாபாத் நெடுஞ்சாலையில் இளைஞரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.






