காவல்துறையினரை வெட்டி விட்டு தப்பி ஓடிய விசாரணை கைதி..!
விழுப்புரத்தில் விசாரணைக்கு அழைத்து சென்ற பொழுது அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடியவரை காவல்துறையினர் சுட்டுப் பிடித்தனர். இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு தொடர்பாக நெல்லை மாவட்டத்தை சேர்ந்த இருவரை கைது செய்து விசாரணைக்காக காவல்துறையினர் அழைத்து சென்றனர்.
காவல்துறையினர் அழைக்க சென்ற பொழுது காவல்துறையினரை அரிவாளால் வெட்டிவிட்டு விசாரணை கைதி தப்பி ஓட முயன்றார். இதனையடுத்து துப்பாக்கியால் இரண்டு ரவுண்ட் சுட்டு காவல்துறையினர் அவரைப் பிடித்தனர்.
தாக்கியதில் காயமடைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் ஐயப்பன் மற்றும் தலைமை காவலர் தீபன் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜனகரம், உதய பிரகாசுக்கும் அதை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காவல்துறையினரை விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நேரில் பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்தார்.





