தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு வருகிறார் குடியரசு தலைவர்..!
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஆகஸ்ட் 5ஆம் தேதி தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு வர உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் படமாக்கப்பட்ட எலிபன்ட் ஆவணப்படத்திற்கு இரு ஆஸ்கர் விருதுகள் கிடைத்தன.
இதை தொடர்ந்து கடந்த ஏப்ரல் 9ம் தேதி இந்த யானைகள் முகாமிற்கு சென்ற பிரதமர் மோடி ஆவணப்படத்தில் நடித்த பொம்மன் – பெள்ளி தம்பதி சந்தித்தார்.
இந்த நிலையில் பொம்மன் பெள்ளி இருவரும் கடந்த ஆண்டு குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்த நிலையில் ஆகஸ்ட் 5ஆம் தேதி தெப்பக்காடு முகாமில் குடியரசுத் தலைவர் வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.





