பெண் மருத்துவர்களிடம் காவல்துறையினர் இரவில் அத்துமீறல்
தெலுங்கானா மாநிலம் கம்மம் பகுதியில் காவல் துறை அதிகாரி ஒருவர் சாலையில் சென்ற பெண் மருத்துவரை கன்னத்தில் ஓங்கி அறைந்தார். சாலையில் நடமாடக் கூடாது என்று தடை உத்தரவு அமலில் இருந்தபோது பெண் மருத்துவர் ஹிந்து மருத்துவ சேவைக்காக இரவில் அழைப்பு வந்ததால் அவர் மருத்துவமனை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அவரை கம்மம் மாவட்டத்தை சேர்ந்த காவல்துறை துணை ஆணையர் வழிமறித்து விசாரித்தபோது தான் தமது அடையாள அட்டையைக் காட்டி தாம் ஒரு மருத்துவர் எனக் கூறியும் என் கையை பிடித்து காவல் நிலையத்திற்கு தரதரவென இழுத்து சென்றதாக அந்த பெண் மருத்துவர் காலையில் புகார் அளித்தார்.
அவருக்கு ஆதரவாக ஏராளமான மருத்துவர்கள் காவல் நிலையத்தில் திரண்டனர். காவல்துறையினர் மன்னிப்புக் கோரி எழுத்துப்பூர்வமான கடிதம் கொடுத்து சமரசம் செய்தனர். இதேபோன்று புகாரை வேறு ஒரு மருத்துவரும் புகார் அளித்துள்ளார்.
மருத்துவர் என கூறியும் தம்மை காவல்துறை அதிகாரி கன்னத்தில் அறைந்து தாக்கவும் பெண் காவலர்கள் யாரும் இல்லாமல் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக புகார் அளித்துள்ளார்.






