--- --:--:-- --

பள்ளி மாணவனை கடுமையாக தாக்கிய உடற்கல்வி ஆசிரியர்..பெற்றோர் அதிர்ச்சி..!

1

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பள்ளி மாணவனை உடற்கல்வி ஆசிரியர் கடுமையாக தாக்கியதில் அவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

 

கார்த்திகேயன் – காளீஸ்வரி தம்பதியினரின் மகன் ஹரிராம் என்பவர் மேகாராபட்டியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறான்.

 

இவன் பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய பொழுது உடலில் காயங்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். புகாரின் பேரில் மேற்கொண்ட விசாரணையில் பேருந்தில் உட்காருவது தொடர்பாக எழுந்த பிரச்சனையை காரணமாக உடற்கல்வி ஆசிரியர் ஹரிராமை அடித்தது தெரியவந்தது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon