--- --:--:-- --

பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்த நபர் கைது..!

4

சென்னை வேளச்சேரி நர்மதா தெருவில் உள்ள குடியிருப்புகளில் பணிக்கு செல்லும் பெண்கள் சுமார் 40 பேர் தங்கி வெவ்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர். 10 வீடுகள் கொண்ட அந்த குடியிருப்புக்கு பொதுவான குளியலறை மற்றும் கழிப்பறை தான் உள்ளது.

 

இந்த நிலையில் குளியலறை பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் இருவர் நின்று கொண்டிருந்ததை பார்த்த அந்த பகுதியினர் அவர்களை விசாரிக்க தொடங்கியதும் இருவரும் தப்பி ஓடியுள்ளனர். இருவரையும் பிடிப்பதற்கு முன்பு தங்களது செல்போனை எடுத்து வேகமாக பயன்படுத்தியதை பார்த்தவர்களுக்கு இருவரும் பெண்கள் குளிப்பதை வீடியோ பதிவு செய்துள்ளனர் என சந்தேகம் எழுந்துள்ளது.

 

இதனால் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்து வேளச்சேரி போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் இருவரும் அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மற்றும் ஸ்ரீராம் என தெரியவந்தது. செல்போன்களில் இருந்து வீடியோக்களை அழித்திருந்ததால் சைபர் கிரைம் போலீசார் மூலம் சாப்ட்வேர் பயன்படுத்தி செல்போன்களில் இருந்து வீடியோக்களை மீட்டனர்.

 

அந்த வீடியோக்களில் அதே பகுதியில் வீட்டிற்கு வெளியில் பொதுவாக குளியலறையில் இருக்கும் வீடுகளை குறிவைத்து பல பெண்களை வீடியோ எடுத்தது தெரியவந்துள்ளது. இருவரையும் கிண்டி மகளிர் காவல்நிலையத்தில் ஒப்படைத்து கைது செய்யப்பட்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon