--- --:--:-- --

சென்னையில் திருடிய நபர்..! அயர்லாந்திலிருந்து சிசிடிவி மூலம் பார்த்து போலீஸுக்கு தகவல்..!

11

சென்னையில் பூட்டி கிடந்த வீட்டில் திருடிய நபரை சிசிடிவி கேமரா மூலம் வெளிநாட்டில் இருந்து பார்த்து உரிமையாளர் கிடைத்த தகவலின் பேரில் காவல்துறையினர் கைதுசெய்தனர். போரூர் அருகே செட்டியார் அகரம் மூர்த்தி நகரில் வசிக்கும் 67 வயது சண்முகசுந்தர வள்ளியின் மகனான அருள் முருகன் அயர்லாந்தில் வசிக்கிறார்.

 

மூதாட்டி வீட்டில் இல்லாத போது யாரோ ஒரு நபர் அங்கு நடமாடுவதை சிசிடிவி கேமரா மூலம் அருள் முருகன் பார்த்துள்ளார்.

 

அதுபற்றி மதுரவாயல் காவல் துறைக்கு தகவல் அளிக்க அங்கு விரைந்த காவல்துறையினர் லேப்டாப்புடன் சுவர் ஏறி வெளியே குதித்த செங்கல்பட்டை சேர்ந்த சைக்கோ முரளி என்பவரை கைது செய்தனர்.

 

விசாரணையில் சில நாட்களுக்கு முன் கூடுவாஞ்சேரியில் வாசலில் கோலம் போடாத வீடுகளை தேடிப் பிடித்து உள்ளே நுழைந்து கொள்ளையடித்து காவல்துறையினரிடம் பிடிபட்டதாக கூறியுள்ளான். இதுவரை கொள்ளையடித்த 4 இடங்களிலும் காவல்துறையிடம் சிக்கி கொண்டதாகவும் கூறியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon