உயிருடன் இருப்பதை நிரூபிக்க போராடும் முதியவர்..!
அரியலூர் மாவட்டத்தில் இறந்துவிட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளதால் உயிரோடு இருப்பதற்கு சான்றிதழ் கேட்டு 72 வயதான முதியவர் அலைக்கழிக்க படுவதால் அவர் உதவித்தொகை பெற முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த முதியவர் அரசு வழங்கும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகையை வைத்து வாழ்க்கை நடத்தி வருகிறார். இந்நிலையில் தான் கணக்கு வைத்திருக்கும் ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் உள்ள வங்கியில் ஆயிரம் ரூபாய் பணத்தை எடுக்க முயன்றுள்ளார்.
ஆனால் அவர் இறந்து விட்டதாக கூறியதால் கிராம நிர்வாக அதிகாரியை சந்தித்து தான் உயிருடன் இருப்பதற்கான சான்றிதழ் தருமாறு கேட்டுள்ளார்.
ஆனால் இதனை வங்கி நிர்வாகம் ஏற்க மறுத்து மீண்டும் வட்டாட்சியர் சான்றிதழ் வாங்க வேண்டும் என கூறியதால் வேறு வழியின்றி வட்டாட்சியரிடம் சென்று உள்ளார். உயிருடன் இருப்பதற்கான சான்றிதழ் வேண்டி முதியவர் அலைக்கழிக்கப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






