அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொரொனா தொற்று உறுதி..!
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். கொரொனா அறிகுறிகளுடன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மருத்துவர்களின் ஆலோசனைப்படி அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி வீட்டில் தனிமைபடுத்திக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தன்னுடன் தொடர்பு படுத்திக்கொண்டு பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.







