--- --:--:-- --

வீட்டுமனை கோரி மனு கொடுத்திருந்த பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த அதிகாரி..!

9

ந்திராவில் வீட்டுமனை கோரி மனு கொடுத்திருந்த பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த கிராம வருவாய் அதிகாரிக்கு அந்த பெண் தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது.

 

ஆந்திர மாநிலம் அக்கனா பள்ளி மாவட்டத்தில் உள்ள பேட்டையில் வசிக்கும் பெண் ஒருவர் இலவச வீட்டு மனை கேட்டு விண்ணப்பித்திருந்தார்.

 

அந்த பெண்ணுக்கு கிராம வருவாய் அதிகாரி பாஸ்கர் அனுப்பிய whatsapp-ல் இலவச வீட்டு மனை தேவை என்றால் தாங்கள் தன்னோடு ஒரு நாள் உல்லாசமாக இருக்க வேண்டும் என கேட்டதாக தெரிகிறது.

 

இதனால் ஆவேசமடைந்த பெண் தனது கணவர் மற்றும் உறவினருடன் அலுவலகத்திற்கு சென்று கிராம வருமை அதிகாரிக்கு தர்ம அடி கொடுத்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் தப்பியோடிய அதிகாரியை தேடி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon