--- --:--:-- --

திடீரென குறைக்கப்படும் சுந்தர் பிச்சையின் சம்பளம்..!

10

12 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்க முடிவை தொடர்ந்து சுந்தர் பிச்சை உட்பட 750 மூத்த அதிகாரியின் சம்பளத்தை குறைக்க google நிறுவனம் முடிவு செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

 

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் google நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை பணியாற்றி வருகிறார். சர்வதேச பொருளாதார நெருக்கடி காரணமாக google நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் 12,000 பேரை பணிநீக்கம் செய்யப் போவதாக அறிவித்தது.

 

இந்த அறிவிப்பை அதன் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை நியாயப்படுத்தி கருத்து தெரிவித்தார். இந்த நிலையில் சுந்தர் பிச்சை உட்பட 750 முக அதிகாரிகளின் சம்பளத்தை குறைத்து கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon