--- --:--:-- --

இரண்டரை மணி நேரம் லிப்டில் சிக்கிய புதுமண தம்பதி..!

6

மெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த புதுமண தம்பதியினர் வரவேற்பு நிகழ்ச்சிக்கு செல்லும் பொழுது இரண்டரை மணி நேரம் லிப்டில் சிக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் வசித்து வரும் தம்பதியின் வரவேற்பு நிகழ்ச்சி 16-வது மாடியில் நடைபெற்றது.

 

இதற்காக அந்த தம்பதிகள் சென்ற பொழுது லிப்ட் ஜாமாகி நின்றது. பின்னர் வரவேற்பு நிகழ்ச்சிக்கு செல்ல முடியாமல் அந்த தம்பதி லிப்டில் சிக்கினர். அவர்களுடன் மேலும் 6 பேர் லிப்டில் இருந்தனர்.

 

உடனடியாக மீட்பு குழுவினருக்கு தகவல் அளிக்கப்பட்டதால் அவர்கள் விரைந்து வந்து லிப்ட்டில் சிக்கியவர்களை சுமார் இரண்டரை மணி நேரத்திற்கு பிறகு பத்திரமாக மீட்டனர்.

 

Right Menu Icon