இளைஞரை பாலியல் வன்கொடுமை செய்த நான்கு பெண்கள்..!
இளம் பெண்கள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பஞ்சாப் இளைஞர் ஒருவர் கூறியுள்ள தகவல் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப்பை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஊடகங்களில் ஒரு பரபரப்பான சம்பவம் குறித்து அதிர்ச்சியான தகவலை அளித்துள்ளார்.
அதன்படி ஜலந்தர் அருகே சாலையில் நடந்த சென்ற பொழுது நான்கு இளம்பெண்கள் முகவரி கேட்டதாகவும் பேச்சு கொடுத்தபடியே மயக்க மருந்து கொடுத்து காரில் கடத்தி சென்றதாகவும் கூறியுள்ளார். மேலும் கண் விழித்து பார்த்தபொழுது போதை பொருள் கொடுத்து 4 பெண்களும் தன்னை பாலில் வன்கொடுமை செய்ததாகவும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
ஆனால் பாலியல் வன்கொடுமை குறித்து போலீசாரிடம் புகார் அளிக்க வேண்டாம் என்று தன் மனைவி கூறியதாக இளைஞர் தெரிவித்துள்ளார். பெண்கள் மீது இளைஞர் ஒருவர் அளித்துள்ள பாலியல் குற்றச்சாட்டு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.






