--- --:--:-- --

திருவாடானை அருகே முதியவரை தாக்கி கொலை செய்த நபர் போலீசில் சரண் அடைந்தார்!

12

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே மாவிலங்கை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஆறுமுகம் மகன் கருப்பையா என்ற முதியவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள இருமதி கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து மகன் மாசிலாமணியும் நெருங்கிய பழக்கமானவர்கள்.

 

கருப்பையா காயங்களுடன் வேப்பம் கொட்டை சேகரிக்கும் வயல்காட்டு பகுதியில் ரத்தக்காயத்துடன் இறந்து கிடந்தவரை உறவினர்கள் தூக்கி வந்து வீட்டில் வைத்துள்ளனர். இவரது மகன் குமாருக்கு தகவல் கொடுத்து உள்ளனர். குமார் சென்னையில் இருந்து இன்று ஆக 6 காலை வந்து பார்த்தபோது கருப்பையாவுக்கு காயங்கள் இருப்பது பற்றி சந்தேகம் அடைந்து திருவாடானை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.

தகவலின் பெயரில் காவல்துறையினர் கருப்பையாவின் உடலை கைப்பற்றி பினக்கூறு ஆய்விற்காக திருவாடானை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால், ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் கருப்பையாவை கொலை செய்ததாக ஒத்துக் கொண்டு மாசிலாமணி திருவாடானை காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

 

கொடைக்கான காரணம் குறித்து அவரிடம் விசாரித்ததாகவும் அப்போது மாசிலாமணி தானும் கருப்பையாவும் நெருங்கிய நண்பர்கள் எனவும் தனக்கு திருமணம் செய்து வைப்பதாக கூறிய நிலையில் இதுவரை திருமணம் செய்து வைக்கவில்லை எனவும் அதனால் ஆத்திரத்தில் கம்பால் அடித்து கொலை செய்ததாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் கொலை சம்பவம் குறித்து திருவாடானை போலீசார் விசாரித்து வருகின்றனர்

Right Menu Icon