--- --:--:-- --

பிரேக் பிடிக்காததால் கவிழ்ந்த லாரி.. சல்லி சலியாக நொறுங்கிய கண்ணாடி..!

3

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான கண்ணாடிகள் சாலையில் விழுந்து நொறுங்கின.

 

ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து 50 லட்ச ரூபாய் மதிப்பிலான கண்ணாடி பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஓன்று சூலகிரி அருகே கொல்லம்பள்ளி என்னும் இடத்தில் வந்து கொண்டிருந்தது. அப்பொழுது சாலையின் நடுவே இருந்த தடுப்பு கம்பிகளில் மோதி லாரி கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது.

 

விபத்தில் லாரிக்குள் இருந்த 50 லட்ச ரூபாய் மதிப்பிலான கண்ணாடிகள் தூள் தூளாகின. விரைந்து வந்த காவலர்கள் கிருஷ்ணகிரியை நோக்கி செல்லக்கூடிய வாகனங்களை நிறுத்தி போக்குவரத்து பணியை மேற்கொண்டனர்.

 

விசாரணையில் லாரி திடீரென பிரேக் பிடிக்காததால் தடுப்புகளில் மோதி நிறுத்த முயற்சி செய்த பொழுது விபத்து நேரிட்டதாக தெரிவித்துள்ளார்.

 

Right Menu Icon