மரத்தில் இருந்த பறவையை தாவி பிடித்த சிறுத்தை..!
சிறுத்தை ஒன்று மரத்தின் உச்சியில் இருக்கும் பறவை ஒன்றை மின்னல் வேகத்தில் ஏறி பறந்து சென்று கவ்விப் பிடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்த மரத்தின் அருகே மெதுவாக வரும் சிறுத்தை முதலில் மரத்தின் கிளையில் ஏறுகிறது. பின்னர் மரத்தின் உச்சியில் இருக்கும் பறவையை ஒரே தாவில் தாவி பிடிக்கும் சிறுத்தை அங்கிருந்து கீழே விழுகிறது. இந்த வீடியோ பலரால் பகிரப்பட்டு வருகிறது.







