--- --:--:-- --

ஆற்றில் குளிக்கச் சென்ற விவசாயியை முதலை இழுத்துச் சென்ற சம்பவம்..!

10

சிதம்பரம் அருகே ஆற்றில் குளிக்கச் சென்ற விவசாயியை முதலை இழுத்துச் சென்ற நிலையில் இரண்டு மணி நேரத்திற்கு பிறகு முதலை வாயிலிருந்து அவர் சடலமாக மீட்கப்பட்டார். கடலூர் மாவட்டம் கடையநல்லூர் கிராமத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவர் குளிப்பதற்காக ஆற்றுக்கு சென்று உள்ளார்.

 

அப்போது எதிர்பாராதவிதமாக முதலை ஒன்று அவரை இழுத்துச் சென்றுள்ளது. இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீயணைப்பு துறையினர் மற்றும் கிராம பொதுமக்கள் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இரண்டு மணி நேரத்திற்கு பிறகு முதலை வாயிலிருந்து கோபாலகிருஷ்ணன் உடலை மீட்டனர்.

 

கோபாலகிருஷ்ணன் உடலை சிதம்பரம் சீர்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வைத்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Right Menu Icon