--- --:--:-- --

சிறுவனை கழிவறை சுத்தம் செய்ய வைத்த சம்பவம்..!

7

கோவையில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சிறுவனை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த விவகாரத்தில் தலைமையாசிரியர் மற்றும் உதவி தலைமையாசிரியர் மீது குழந்தை வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

 

கோவை செம்மேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 3 ஆம் வகுப்பு படிக்கும் சிறுவனை கடந்த மார்ச் 29ஆம் தேதி கழிவறையை சுத்தம் செய்ய வைத்ததாக ஏற்படுகிறது. இது குறித்து சிறுவனின் தாயார் போலீசில் புகார் அளித்தார்.

 

இதுகுறித்து போலீசார் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று குழந்தைகளிடம் விசாரணை மேற்கொண்டனர். சிறுவனை கழிவறையை சுத்தம் செய்ய வைத்ததோடு சிறுவனின் தாயை மரியாதை குறைவாக நடத்தியதாகவும் பள்ளி தலைமையாசிரியர் ஜெயந்தி உதவி தலைமை ஆசிரியர் தங்க மாரியம்மாள் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

 

அதன்படி வன்கொடுமை மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Right Menu Icon