--- --:--:-- --

டயர் வெடித்து தலைக்குப்புற கவிழ்ந்த கார்.!

8

திருவள்ளூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்தில் இரண்டு மாத குழந்தை உட்பட 6 பேர் காயமடைந்துள்ளனர். ஆந்திர மாநிலம் காவிரி பகுதியை சேர்ந்தவர் சாய்குமார்.

 

இவர் தனது இரண்டு மாத பெண் குழந்தையும் சிகிச்சைக்காக சென்னை வந்திருந்த நிலையில் சிகிச்சை முடிந்து காரில் சென்று திரும்பியுள்ளார். காரில் சென்னை, கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் பயணித்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் சின்ன கோபுரம் பகுதியை நெருங்கியது.

 

காரின் டயர் வெடித்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை தடுப்பில் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் காரில் பயணித்த 6 பேரும் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த விபத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

Right Menu Icon