சிசுவின் பாலினத்தை தெரிவித்த மருத்துவமனைக்கு சீல்..!
சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சிசுவின் பாலினத்தை தெரிவித்தது உள்ளிட்ட 11 காரணங்களுக்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் cadeace என்ற தனியார் மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் அனுமதி இன்றி கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை கண்டறிந்து கரு கலப்பில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் அனுமதி பெறாமல் மனநோய் சிகிச்சை அளித்ததற்காகவும், அவசரகால மருத்துவர்கள் இல்லாதது, உபகரணங்கள் இல்லாதது என 11 காரணங்களுக்காக மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குனர் இளங்கோவன் தலைமையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.





