--- --:--:-- --

இந்து மகா சபாவின் தலைவர் ஸ்ரீ மீது பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு

5

இந்து மகா சபாவின் தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ பாலியல் தொல்லை கொடுத்ததாக அமைப்பில் பணிபுரியும் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். தன் கணவர் மீது பொய் புகார் கொடுக்கப்பட்டு இருப்பதாக ஸ்ரீயின் மனைவி நான்சி தெரிவிக்கிறார்.

 

அகில இந்திய இந்து மகாசபா வில் பணிபுரிந்த பெண் ஒருவர் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் சபாவின் தலைவர் ஸ்ரீ என்கிற ஸ்ரீகண்டன் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததோடு மிரட்டி வந்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார். புகாரின் பேரில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள காவலர்கள் ஸ்ரீயை தேடி வருகின்றனர்.

 

இந்நிலையில் ஸ்ரீயின் மனைவி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அந்த பெண் மீது புகார் அளித்துள்ளார். அதில் தனது கணவர் சபாவில் பணிபுரிந்த அந்த பெண்ணுக்கு நிறைய பண உதவியைச் செய்திருக்கிறார் என்றும், அவற்றை திருப்பி கேட்டதால் மோசமான நடவடிக்கையால் அந்த பெண்ணை சபையில் இருந்து நீக்கியதால் பழிவாங்கும் நோக்கத்தில் புகார் அளிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

 

இதனிடையே புகார் அளித்துள்ள அந்தப் பெண் மீது பெங்களூருவில் கொலைவழக்கு இருப்பதாகவும் போலிபிணையை வைத்து ஏமாற்றி இருப்பதாகவும் சகோதரரும் வழக்கறிஞருமான சார்லஸ் தெரிவித்தார்.

Leave a Reply

Right Menu Icon