கொரொனாவில் இருந்து குணமடைந்த நபர் மருத்துவருடன் நடனம்..!
பெங்களூருவில் கொரோனாவில் இருந்து குணமடைந்த நபர் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு செல்லும்போது மருத்துவருடன் சேர்ந்த நடனமாடிய வீடியோ வெளியாகியுள்ளது. ஆம்புலன்ஸ் ஓட்டுநரான குமார் என்பவர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் படுக்கை கிடைக்காமல் இருந்துள்ளார்.
நீண்ட போராட்டத்திற்குப் பிறகு பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையின் பலனாக தற்போது குணமடைந்து வீடு திரும்பினார். அப்போது குணமடைந்து உற்சாகத்தில் மருத்துவமனையில் நடனமாடினார்.
அப்போது அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் ஒருவருடன் நடனமாடிய காட்சிகள் வெளியாகியுள்ளன.






