--- --:--:-- --

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை..!

7

சிவகாசி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் அசாமை சேர்ந்தவர் ஜூலிக்கு சாகும் வரை சிறைத்தண்டனை வழங்கி ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கடந்த 2009ஆம் ஆண்டு சிவகாசியை சேர்ந்த 8 வயது சிறுமி இயற்கை உபாதை கழிக்க சென்ற பொழுது மறுநாள் சடலமாக மீட்கப்பட்டார்.

 

பிரேத பரிசோதனையில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது. உறுதியானது நூல் கம்பெனியில் வேலை பார்த்து வந்த அசாமை சேர்ந்த நபர் தான் கொலையாளி என தெரியவந்ததையடுத்து கைது செய்த போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

 

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்ற நீதிபதி சாகும் வரை சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon