குழந்தையை விழுங்கியதாக நினைத்து மலைப்பாம்பின் வயிற்றை கிழித்த பொது மக்கள்..!
இந்தோனேசியாவில் பிடிபட்ட ராட்சத மலைப்பாம்பு குழந்தையை விழுங்கி இருக்கலாம் என்று நினைத்து அதன் வயிற்றை பொதுமக்கள் கிழித்து பார்த்த சம்பவம் நடந்துள்ளது.
இந்தோனேசியாவின் தெற்கில் மாரோ என்ற இடத்தில் 23 அடி நீள ராட்சத மலைப்பாம்பு வந்துள்ளது. கன்றுக்குட்டியை உண்ட மயக்கத்தில் நகர முடியாமல் பாறைகளுக்கிடையே கிடந்த மலைப்பாம்பை பொதுமக்கள் கயிறு கட்டி வெளியே இழுத்து வந்துள்ளனர்.
அந்தப் பாம்பு குழந்தையையும் விழுங்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அதன் வயிற்றை பொதுமக்கள் கிழித்து பார்த்துள்ளனர். அதன்பிறகு மலைப்பாம்பு சற்று முன்பு கன்றுக்குட்டி ஒன்றை உணவாகி இருப்பது பொது மக்களுக்கு தெரியவந்தது.
அங்கு கால்நடைகள், கோழிகள், அடிக்கடி காணாமல் போனதாக கூறியவர்கள் இந்த மலை பாம்பு அதனை விழுங்கி இருக்கலாம் என்று கூறுகின்றனர்.
இந்தோனேஷியாவில் சில வேளைகளில் இது போன்ற ராட்சத மலைப்பாம்பு குழந்தையை விளங்கிய கொடூரமும் நடந்திருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.






