கோயில் சுவரில் ஓட்டை போட்டு கொள்ளையடித்த கும்பல்..!
கடலூர் அருகே கோவில் சுவற்றை துளையிட்டு ஒரு லட்சம் ரூபாய் திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் திட்டக்குடி திரௌபதி அம்மன் ஆலயத்தின் பின்பக்க உண்டியலின் பூட்டை உடைத்து அடையாளம் தெரியாத நபர்கள் ஒரு லட்சம் மதிப்பிலான சில்லறை காசுகளை அள்ளி சென்றுள்ளனர்.
இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில் திருவிழா நடத்த ஒரு சில நாட்களிலேயே உண்டியலை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






