அணில் சேமியா பாக்கெட்டில் கிடந்த தவளை..!
சேமியா பாக்கெட்டில் இறந்து போன தவளை இருந்ததாக இருந்த புகாரைத் தொடர்ந்து திண்டுக்கல் அனில் சேமியா நிறுவனத்தை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சேமியாவின் மாதிரிகளை சென்னையில் உள்ள கிண்டி உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைத்தனர்.
தேவகோட்டையில் விற்பனை செய்யப்பட்ட அணில் சேமியா பாக்கெட்டில் இறந்து போன தவளை காய்ந்த நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக பூமிநாதன் என்பவர் அளித்த புகாரின் பேரில் திண்டுக்கல்லில் அந்த நிறுவனத்தின் வேலை தயாரிப்பு கூடங்களை ஆய்வு செய்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள் இருப்பினும் சேமியா பாக்கெட்டுகளை தற்காலிகமாக விற்பனை செய்யக்கூடாது என உத்தரவிட்டனர்.





