--- --:--:-- --

ரகசிய திருமணம் செய்து கொண்ட மகளை கடத்த முயன்ற பெண் வீட்டார்..!

2

ந்திர மாநிலத்தில் மணப்பெண்ணை திருமண மண்டபத்திற்குள் புகுந்து பெண்ணின் வீட்டாரே கடத்த முயன்ற காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ராஜ மந்திரியில் ஒன்றாக படித்து காதலித்த கால்நடை மருத்துவர்கள் இருவர் கடந்த 13ஆம் தேதி ரகசிய திருமணம் செய்துள்ளனர்.

 

இது குறித்து தனது பெற்றோருக்கு மணமகன் தெரியப்படுத்திய நிலையில் அவர்கள் 21ஆம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர். அப்பொழுது அங்கு வந்த பெண் வீட்டார் மணப்பெண்ணை குண்டு கட்டாக தூக்கி கடத்த முயற்சி செய்திருக்கிறார்கள்.

 

பெண்ணும் கத்தி கதறி கூச்சல் போட்டிருக்கிறார். இதனோடு பெண்ணை காப்பாற்ற முயன்றவர்கள் மீது வெப்பன்ஸ் ஸ்ப்ரே அடித்து கலைக்கப்பட்டு இருக்கிறார்கள். தங்களுக்கு தெரியாமல் ரகசிய திருமணம் செய்த பெண்ணை அவரது வீட்டார் கடத்த முயன்றதால் அந்த நிகழ்வில் பரபரப்பு ஏற்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon