--- --:--:-- --

போதையில் ரகளை செய்த இளைஞர்கள்.. தட்டி கேட்டதால் ஓட்டுனருக்கு அடி, உதை..!

2

கோவையில் மது போதையில் அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கிய மூன்று இளைஞர்களை காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

 

கோவையில் அரசு பேருந்தின் படியில் அமர்ந்து பயணம் செய்த போதை இளைஞர்களை தட்டி கேட்ட ஓட்டுநரை போதை இளைஞர்கள் தாக்கிய சம்பவம் நடந்துள்ளது. மதுரையில் அரசு பேருந்து ஒன்று சென்றது.

 

அப்பொழுது அரசு பேருந்து ஓட்டுனர் ரமேஷ் பணி முடித்துவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக அந்த பேருந்தில் பயணித்துள்ளார். அப்பொழுது அதீத போதையில் மூன்று இளைஞர்கள் பேருந்தில் படிக்கட்டில் அமர்ந்து ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்டதை பார்த்த ஓட்டுநர் ரமேஷ் போதை இளைஞர்களை தட்டி கேட்டுள்ளார்.

 

இதனால் ஆத்திரமடைந்த போதை இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் இளைஞர்கள் ரமேஷை சரமாரியாக தாக்க தொடங்கினார். 50-க்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்தில் இருந்த பொழுதும் யாரும் தடுக்க முன்வராத நிலையில் பேருந்து ஓட்டுனர் சூலூர் காவல் நிலையம் முன்பாக பேரவை நேரத்தை காவல்துறைக்கு தகவல் கொடுத்தார்.

 

இளைஞர்களை காவல்துறையினர் அழைத்து சென்றனர். மூவரும் மதுரை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் என்பதும் வேலை முடித்துவிட்டு போதையில் படிக்கட்டு அமர்ந்து ரகளை செய்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

 

Right Menu Icon