மாஸ்கை விழுங்கிய நாய் உயிருக்கு போராடிய சம்பவம்..!
நாய் ஒன்று உருண்டு பிரண்டு கதறிக் கொண்டு இருப்பதை பார்த்ததும் தக்க சமயத்தில் கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார் நபர் ஒருவர். தற்போது அந்த நாய் நலம் ஆகியுள்ளது. கொரொனா தொற்றால் மக்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இதனால் மாஸ்க் அணிந்து கொண்டுதான் மக்கள் சாலைகளில் சென்று வருகின்றனர். இதில் சிலர் தான் பயன்படுத்திய மாஸ்க்கை குப்பைத் தொட்டியில் போடாமல் அப்படியே சாலைகளில் வீசிவிட்டு செல்கின்றனர்.
இவ்வாறான செயல்களால் மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தெரியும்தானே. இதனால் பிராணிகளும் தொல்லைகளை அனுபவிக்கிறது. இந்த நிலையில் சைபீரியன் ஹஸ்கி வகையை சேர்ந்த நாய் உருண்டு பிரண்டு கத்தியுள்ளது.
நாயை வளர்த்து வந்தவருக்கு சில தினங்களுக்கு முன் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றார். உடனே அவர்கள் கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர், அதனை மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்தனர்.
அப்பொழுது அந்த நாயின் வயிற்றில் மாஸ்க் இருப்பது தெரியவந்தது, இதனை தொடர்ந்து நாயின் வயிற்றில் இருந்த மாஸ்கை ஆபரேஷன் செய்து அகற்ற மருத்துவர்கள் முடிவு செய்ததால் அதற்கு மயக்க ஊசி செலுத்தி வயிற்றிலிருந்து ஆபரேஷன் மூலம் எடுத்துள்ளனர். தற்போது நாய் நலமுடன் உள்ளது.







