பாலியல் புகாரில் சிக்கிய நீலகிரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம்..!
பாலியல் புகாரில் சிக்கிய நீலகிரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சார்லஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப் பிரிவில் பணியாற்றி வந்த சார்லஸ்.
அங்கு பெண் காவலரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் சார்லஸ் மீதான குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பது தெரிய வந்தது.
அதன் அடிப்படையில் தற்போது நீலகிரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளராக இருக்கும் சார்லசை பணியிடை நீக்கம் செய்து கூடுதல் முதன்மை செயலாளர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.







