--- --:--:-- --

பள்ளி மாணவர்கள் நான்கு பேரை கடித்த நாய்..!

7

கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவர்கள் நான்கு பேரை கடித்ததினால் தானாக காவல் நிலையம் வந்து சரணடைந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

 

இந்த நிலையில் அந்த பகுதியில் உலாவி கொண்டிருந்த வெறிநாய் ஒன்று பள்ளிக்கு சென்று கொண்டிருந்த நான்கு மாணவர்களை கடித்தது. இதனையடுத்து காயமடைந்த நான்கு மாணவர்களை போலீசார் காவல் வாகனத்தில் அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

 

இதனிடையே இந்த பகுதியில் மாணவர்களை கடித்த வெறி நாய் தானாக வந்து ஊத்தங்கரை காவல் நிலையம் முன்பு அமர்ந்திருந்தது. இந்த காட்சி பார்ப்போரை நாய் தானாக காவல் நிலையம் வந்து சரணடைந்தது போல் அமைந்துள்ளதாக கூறினார்.

 

Right Menu Icon