மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட மாணவன் உயிரிழப்பு..!
நாமக்கல் அருகே அரசு பள்ளி வளாகத்தில் மின்சாரம் தாக்கி மாணவர் இனியவன் உயிரிழந்தார். சேந்தமங்கலத்தைச் சேர்ந்தவர் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் இனியவன் தனது நண்பர்களுடன் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கால்பந்து விளையாட சென்றான். சத்துணவு மையம் கட்டடத்தின் மீது இனியவன் ஏறிய பொழுது அருகில் இருந்த மின்கம்பி மீது கை பட்டுள்ளது. இதில் மின்சாரம் தாக்கியதில் இனியவன் தூக்கி வீசப்பட்டான்.
இதை தொடர்ந்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட இனியவனை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே இனியவன் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.






