போலீசாரை கத்தியால் தாக்கிவிட்டு தப்பியோட முயன்று குற்றவாளி..!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் விசாரணைக்காக அழைத்து சென்ற இடத்தில் காவலரை கத்தியால் குத்தி விட்டு தப்பியோட முயன்ற ஆந்திர குற்றவாளியை காவலர்கள் கைது செய்தனர்.
வழிப்பறி, திருட்டு பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் வழிப்பறி வழக்கிற்காக ஆந்திரா சென்ற ஓசூர் காவலர்கள் கைது செய்து ஓசூர் அழைத்து வந்தனர். ஓசூரில் உள்ள திருப்பள்ளி மெஜஸ்டிக் பகுதியில் திருடியது குறித்த காவலர்கள் நேரில் அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்பொழுது நான்கு காவலர்களை கத்தியால் தாக்கி விட்டு தப்பி ஓடியுள்ளார். எனவே துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளார். குண்டு காலில் காயமடைந்த காவலர்களுக்கு ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





