--- --:--:-- --

ஒரே தேசம், ஒரே தேர்தல் முறை தான் தற்போது நாட்டிற்கு அவசியம்..!

8

சில மாதங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுவதால் வளர்ச்சிப் பணிகள் தேக்கம் அடைந்து விடுகின்றன. எனவே ஒரே தேசம், ஒரே தேர்தல் முறை தான் தற்போது நாட்டிற்கு அவசியமானது என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

 

மும்பை தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின் காணொளி மூலம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மும்பை தாக்குதல் சம்பவத்தை நாடு எப்போதும் மறக்காது என கூறினார். பயங்கரவாதத்தை எதிர்த்து போராட தற்போது புதிய கொள்கைகளும், வழிமுறைகளும் வகுக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

 

சில மாதங்களுக்கு ஒருமுறை தேசத்தின் ஏதாவது ஒரு பகுதியில் தேர்தல் நடைபெறுகிறது என்றும் இதனால் வளர்ச்சிப் பணிகளில் பெரும் தாக்கம் ஏற்படுவதை நாம் அனைவருமே அறிந்து வைத்து இருக்கிறோம் என்றும் பேசியுள்ளார்.

 

எனவே வளர்ச்சிப் பணிகளில் தேக்கம் அடையாமல் இருக்க ஒரே தேசம் ஒரே தேர்தல் முறையை நாம் பின்பற்றுவது அவசியம் என பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

 

நாடாளுமன்றம், சட்டப்பேரவை, உள்ளாட்சி தேர்தல் என அனைத்திற்கும் தனித்தனியாக வாக்காளர்கள் பட்டியல் தயாரிப்பது வீண் வேலை என்றும் இவை அனைத்திற்கும் ஒரே வாக்காளர் பட்டியல் தயாரிப்பது தான் சிறந்ததாக இருக்கும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Right Menu Icon