படத்தின் போஸ்டருக்கே எழுந்த சர்ச்சை..!
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் மற்றும் நடிகர் பார்த்திபன். இவர் கடைசியாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதேபோல் அவர் கடைசியாக இயக்கிய திரைப்படம் ‘இரவின் நிழல்’. விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ‘இரவின் நிழல்’ படத்தை தொடர்ந்து ‘டீன்ஸ்’ என்கிற படத்தை பார்த்திபன் இயக்குவதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் நான் தான் சி.எம் என்ற படத்தை பார்த்திபன் இயக்கி நடிக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு பதிவு ஒன்றை அவர் போட்டிருந்தார்.
தனது எக்ஸ் பக்கத்தில், “பெரியோர்களே, தாய்மார்களே, வாக்காளப் பெருமக்களே! ஜனநாயக உரிமை யார் வேண்டுமானாலும் தேர்தலில் நிற்கலாம். நானும் நிற்கிறேன். என்னை உட்கார வைக்க வேண்டியது உங்கள் கடமை. நான் CM நாற்காலியில் அமர்ந்தப் பிறகு போடப் போகும் முதல் கையெழுத்து எனக்குப் பிறகு அந்த சீட்டில் யாருமே அமரக் கூடாது என்பது தான்! போடுங்கம்மா ஓட்டு Boat’ சின்னத்தைப் பாத்து! இப்படிக்கு, C. M . சிங்காரவேலன் எனும் நான்…. ‘சோத்துக் கட்சி” என்று குறிப்பிட்டிருந்தார்.
ஜனநாயக உரிமை யார் வேண்டுமானாலும் தேர்தலில் நிற்கலாம். நானும் நிற்கிறேன். என்னை உட்கார வைக்க வேண்டியது உங்கள் கடமை. நான் CM நாற்காலியில் அமர்ந்தப் பிறகு போடப் போகும் முதல் கையெழுத்து எனக்குப் பிறகு அந்த சீட்டில் யாருமே அமரக் கூடாது என்பது தான்! போடுங்கம்மா ஓட்டு Boat’ சின்னத்தைப் பாத்து! இப்படிக்கு, C. M . சிங்காரவேலன் எனும் நான்…. ‘சோத்துக் கட்சி” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையே அந்தப் பதிவில், சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரின் பெயரை பயன்படுத்தியிருப்பதும், போட் சின்னம், சோத்துக் கட்சி என்று குறிப்பிட்டிருப்பதும் சர்ச்சைக்குள்ளானது. இந்த நிலையில் இதற்கு தனது சமூகவலைதளங்களில் பார்த்திபன் விளக்கம் தந்துள்ளார். தனது படத்தில் பயன்படுத்திய பெயர்கள் அனைத்தும் கற்பனை பெயர்களே என்று குறிப்பிட்டுள்ளார். சி.எம். பக்கத்தில் rhyming ஆக ‘சி’ இருக்க வேண்டுமென வைத்த பெயரே சிங்காரவேலன் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆனால் அது மரியாதைமிகு சிங்காரவேலரை குறிப்பிடுவதால் அதை உடனடியாக மாற்ற மனதார சம்மதிக்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதே சமயம், போட் என்ற வார்த்தையையும் சோத்துக்கட்சி என்ற வார்த்தையையும் படத்தில் இருந்து நீக்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். முற்றுகைப் போராட்டம் போன்ற விளம்பரங்கள் தன் படத்திற்கு தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ள பார்த்திபன், மீனவ நண்பர்கள் மட்டுமின்றி யார் மனதையும் இந்த சி.எம். சீர்கெட செய்ய மாட்டான் என்று குறிப்பிட்டுள்ளார்.






