அதிவேகத்தில் வந்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார்..!
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் கட்டுப்பாட்டில் இருந்த கார் சாலையோர மரத்தின் மீது மோதி விபத்திற்கு உள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மரம் மற்றும் மின்கம்பத்தின் மீது மோதி நின்றது. இதில் கார் ஓட்டுநர் படுகாயம் அடைந்த நிலையில் அவரை மீட்டு பொதுமக்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த நிலையில் இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. காவல்துறை நடத்திய முதல் கட்ட விசாரணையில் மழை காரணமாக பிரேக் பிடிக்காததால் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்கு உள்ளானதாக தெரியவந்துள்ளது.






